Sunday, May 19, 2013

அழிவுகளை உருவாக்கியவர்கள் புலிகளும் புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புக்களுமே:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, May 19, 2013
இலங்கை::இது யுத்தம் நடந்த யுகமாக அன்றி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த யுகமாக இந்த யுகம் வரலாற்றில் இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றி விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

மனித படுகொலைகள் மற்றும் இரத்த ஆறு ஓடிய யுகமாக அல்லாது இது இரத்த வெள்ளம் நிறுத்தப்பட்ட யுகமாக வரலாற்றில் பதியப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, டயர்களில் மனிதர்கள் எரிக்கப்பட்ட யுகத்துக்கு முடிவு கட்டிய யுகமாகவும் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய யுகமாகவும் இந்த யுகத்தை வரலாறு பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.யுத்த வெற்றி விழா நேற்று கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட போது விழாவிற்குத் தலைமை தாங்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சமாதானமாக வாழ வேண்டும் என்ற மன நிலை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டி யெழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெற்றி விழாவில் தொடர்ந் தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக படையினர் செய் துள்ள சேவையை நினைவு படுத்துவ தனால் 2009ற்கு முன் எமது மக்கள் வாழ்ந்த நிலையை சிந்திக்க வேண்டும்.நாம் இன்று கூடியிருக்கும் காலி முகத்திடலில் சுதந்திரமாக நடமாட முடியாத காலம் அது. நம் கண் எதிரே தெரியும் மத்திய வங்கிக்கட்டடம் குண்டு வெடிப்பில் இடிந்து விழுந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு குண்டு லொறி வருவதற்கு அன்று வழி இருந்தது. இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகின. அநுராதபுரம் மகா போதியில் காத்தான்குடி பள்ளி வாசலில், மாத்தறை பள்ளிவாசலில் குண்டுகள் வெடித்தன. அதில் பாதிக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்றும் அதன் துயரத்தை அனுபவிக்கிறார். மக்கள் பல இடங்களுக்கு குண்டு வெடிப்பு நடந்த சம்பவங்களை வைத்தே பெயரிட்டுள்ளனர்.

பாரமி குலதுங்க கொலை செய்யப்பட்ட சந்தி, இராணுவ தளபதி கொலை செய்யப்பட்ட இடம், மேஜர் முத்தலிப் படு கொலை செய்யப்பட்ட சந்தி, பிரேமதாஸ படுகொலை சந்தி, கதிர்காமர் கொலைசெய்யப்பட்ட வீடு என்றே சில இடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புலிகள் இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையே அன்று இருந்தது. புலிகளிடம் இருந்து தப்பிக்க இடம் இல்லை என்றிருந்த நிலையிலும் நாட்டு மக்களை அழிவிலிருந்து மீட்க எவரும் துணியவில்லை. 1977இல் ஆட்சியை கைப்பற்றி யவர்கள் 6இல் 5 வீத பலத் துடனே இருந்து கொண்டு புலிகள் தாக்கும் போது தமக்கான பாதுகாப்பை தாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினர். அதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி 700 பொலிஸ் அதிகாரிகளை புலிகளிடம் காட்டிக் கொடுத்து புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். அவரையும் புலிகள் வீதியில் படுகொலை செய்தனர்.புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத உடையை வழங்கி சமாதானம் செய்ய அழைத்துவரப்பட்ட இந்திய பிரதமரும் படுகொலை செய்யப் பட்டார்.

வெளிநாடுகளின் தலையீட்டுடன் நாட்டை துண் டாக்கி ஒரு பகுதியை வழங்கிய வர்களால் கூட கொழும்பில் குண்டு வெடிப்பதை நிறுத்த முடியவில்லை. புலிகளுடன் மோதி வெல்ல முடியாது என்ற மன நிலையிலேயே அன்றைய தலைவர்கள் செயற் பட்டனர். புலிகளுடன் மோத வேண் டாம் என்று எம்மிடமும் முழு உலகமும் கூறியது. நாமும் அவ்வாறு செயற்பட்டிருந்தால் எந்தப் பார்சல்களைப் பார்த்தாலும் பயப்படும் நிலையே இன்றும் இருந்திருக்கும். உலகம் சொன் னதை ஏற்காமல் எமது இளை ஞர்கள் மீது நம்பிக்கை வைத் தோம். அவர்களின் பலத்தின் மீதே அபார நம்பிக்கை கொண் டோம். அதனால் இந்த நாடு இன்று மரண அச்சுறுத்தல் அற்ற நாடாக உள்ளது. எவர் எதைச் சொன்னாலும் நாடு பெற்ற வெற்றி எமது பிள்ளை களின் மனதில் பதிந்துள்ளது. யுத்த வரலாற்றை மறக்காது அவர்கள் அடுத்த தலை முறைக்கும் கூறுவது நிச்சயம். எமது பிள்ளை கள் வரலாற்றை மறந்து விடக் கூடியவர்கள் அல்லர். புலிகளுக்கு நாட்டை தாரைவார்க்க யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற் கொண் டவர்கள் நாட்டு மக்கள் வர லாற்றை மறப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை நாம் அறிவோம். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற் கொண்டு நாட்டை காட்டிக் கொடுத்தவர்களே நாட்டின் விவசாய நீர்ப்பாசனத்துக்காக மின்னேரி போன்ற பாரிய குளங்களை நிர்மாணித்த மகாசென் மன்னரின் பெயரை சூராவளிக்குச் சூட்டுமாறு 2003இல் இது சம்பந்தமான சர்வதேச அமைப்புக்கு கூறியுள் ளார்கள். இதனால் அண்மையில் இடம்பெற்ற சூறாவளிக்கு சர்வதேச ஊடகங்கள் “மகாசென்” எனப் பெயரிட்டுள்ளன.

இது போன்ற வரலாற்றை மக்கள் மறப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும் சர்வதேச ரீதியிலும் நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர்.வடக்கு மக்களே அகோரத்தை அதிகம் உணர்ந்தவர்கள். தற்போது வடக்கில் 12 அரசியல் கட்சிகள் சுதந்திரமாக அரசியல் செய்யக் கூடிய சூழல் உருவாக்கப்பட் டுள்ளது. அவரவர் தத்தமது கருத்துக்களை வெளியிடவும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அன்று தமது கருத்துப்படி அரசியல் செய்ய முனைந்த கட்சிகள் குண்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது. இத்தகைய சகல கட்சி களினதும் தலைவர்கள் அன்று பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கியிருந்ததை சிந்தித் துப்பார்க்க வேண்டும். ஈரோஸ், புளொட், டெலோ, ஈ.பி. ஆர். எல். எப். என பல அமைப்புக்கள் இதிலடங்கு கின்றன.தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கொழும்பிற்கு வந்ததால் தம் உயிரைப் பாதுகாத்துக் கொண்டார். வடக்கு தமிழ் மக்களுக்கு மோசமான கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தி அழிவுக்கு வித்திட்டது. பிரபாகரன் போன்றே புலம் பெயர் தமிழ் அமைப்புக் களும் பிரிவினையை ஆதரிக்கும் வெளிநாட்டு சக்திகளுமே தமிழ் சமூகத்தை அழிப்பதற்கே இப்போதும் முயற்சிக்கின்றன. வடக்கு மக்கள் தமக்காக முன்னிற்பவர்களின் நேர்மையை அறியும் காலம் வந்துள்ளது முப்பது வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மீனவர்களுக்கு சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கையில் வேறு எவரோ வந்து எமது கடலில் மீன்களை பிடித்துச் செல்கின்றனர். அவ்வாறு எமது வளங்களை சூறையாடு பவர்களே வடக்கு தமிழ் மக்களுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த மோசடிப் பேர்வழிகளிட மிருந்து வடக்கு மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடக்கில் மூன்று இலட்சம் மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தபோது உணவுப் பொதியொன்றை அவர்களுக்கு வழங்கியது இலங்கை இராணு வமே. அரசாங்கம் அவர்களைக் கைவிடவில்லை. தமிழ் மக்கள் பெயரை வைத்து கோடிக்கணக்கில் நிதிசேர்த்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அத்தகைய சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பதை உணர வேண்டும். புலிகள் அமைப்பில் இருந்த பதினோராயிரத்துக்கு மேற் பட்டோர் புனர்வாழ்வளிக் கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக சமூகத்தில் வாழ்வதற்கு நாங்கள் வாய்ப்பளித் துள்ளோம்.

தூக்குத் தண்டனைக் குட்படுத்தப் படவேண்டியவர்களுக்குக்கூட நாம் புனர்வாழ்வளித் துள்ளோம். பயங்கரவாத அமைப்பில் செயற்பட்டவர்களுக்கு இலங்கை யில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமும் நிவா ரணமும் உலகில் வேறெந்த நாட்டிலும் கிடைக்க முடியாது.உண்மையில் தமக்குக் கிடைத்துள்ள மன்னிப்பிற்காக வடக்கு இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். நியாயமாகச் சிந்திக்கும் மனிதர் களும் உண்மையில் மகிழ்ச்சி யடைவர்.  இதுவரை அரசாங்கம் சிவில் பாதுகாப்புப் படைக்கு அத்தகைய 4000 பேரை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றனர். பொலிஸிலும் படையிலும் சேருவதற்கு அணிவகுத்து நிற்கின்றனர்.அரச படைகளில் தமிழ் இளைஞர்கள் இணைவதை வடக்கில் உள்ள சிலரும் வெளிநாடுகளிலுள்ள தலைவர் களும் விரும்பவில்லை. அதனை எதிர்க்கின்றனர். எனினும் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்துக்கு எதிராக கிளிநொச்சியில் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் வீதியில் இறங்கினர். வடக்கு, கிழக்கு மக்களின் மனதை நான் அறிவேன். முன்னர் தேர்தலில் பொன்னம்பலம் போன்றோர் நின்றபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வடக்கில் போட்டியிட்ட கொப்பேகடுவவை வெல்ல வைத்தனர்.

நாம் அனைவரும் இலங்கையர்கள். ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழ வேண்டும் என்ற மனநிலை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப் பப்பட்டுள்ளது என்பதே எனது நம்பிக்கை. வெளிநாட்டு அழுத்தங்கள், சர்வதேச ஆக்கிரமிப்பு எமக்குப் புதியதல்ல. பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நாம் இந்த நான்கு வருடத்தில் பல வழிகளில் அழுத்தங்களை எதிர்கொண்டோம். “கிரீஸ் பேய், நீதிமன்ற சுயாதீனம், ஊடக சுதந்திரம், மனித உரிமைக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள்” என பல வழிமுறை களை சில தீயசக்திகள் கடந்த நான்கு வருடத்தில் உபயோகித் துள்ளன.மனித உரிமையை பாதுகாப் பது, ஜனநாயகத்தைப் பாது ¡ப்பது போன்றவிடயங்களே முன்னிறுத்தப்படுகின்றன. எனினும் இவற்றின் பின்னணி யில் நாட்டை அடிமைப் படுத்திக்கொள்ளும் சூழ்ச்சிகளே உள்ளன. இப்போது இது போன்ற சூழ்ச்சிகளில் தெளிவு பெற்ற வர்களாக எமது மக்கள் வளர்ந்து விட்டனர். கடந்த நான்கு வருடங்களாக நாம் இத்தகைய சக்திகளுடன் போராட வேண்டியிருந்தது. எதிர்காலத்திலும் இதே நிலை மையே இருக்கும். எனினும் உயிரைப் பணயம் வைத்து வெற்றி கொண்ட நாட்டின் ஒரு அங்குலத்தையாவது அபகரிப் பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம்செய்யக் கூடியவர்கள் இலங்கைத் தாயின் பிள்ளைகள். நாம் அனைவருமே நமது தாய் நாட்டுக்காக உயிரிழக்க நேர்ந்தாலும் நாட்டைப் பாதுகாப்பதற்கு இன்னும் ஆயிரமாயிரம் மக்கள் உள்ள நாடு இது என்பது பெருமை யுடன் குறிப்பிட வேண்டிய விடயம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment