Sunday, May 19, 2013
இலங்கை::13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
வெளிவிகார அமைச்சர் ஜீ எல் பீரிஸஜடன் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தார்.
எனினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தின் கீழ் உள்ள சரத்துக்களை விலக்கி கொள்வது தொடர்பாக எதுவித பேச்சுவார்தையும் இடம் பெறவில்ழல என கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இணைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த முறைமை ரத்துச் செய்யக்கோரி எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளின் அனைத்து தரப்பினரையும் எதிர்வரும் நாட்களில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்
இதேவேளை. மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது என பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜாதிக்க ஹெல உறுமயவின் நிலைப்பாடே அரசாங்கத்தின் நிலைப்பாடு என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment