Sunday, May 19, 2013

சீன பிரதமர் இன்று இந்தியா வருகை!

Sunday, May 19, 2013
புதுடில்லி::மதியம், டில்லி வரும் அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திங்கள் கிழமை, இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
 
லி கெகியாங்கின், மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது, அவர் மும்பைக்கும் செல்கிறார். அங்கு பல ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடலாம் என, கூறப்பட்டுள்ளது. இரு பிரதமர்களின் பேச்சுவார்த்தைகளின் போது, எல்லையில் அடிக்கடி நிகழும் பதற்றமான சூழல், சமீபத்தில், லடாக்கில் நடந்த அத்துமீறல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்படும்.
 
சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வருகிறார். இருதரப்பு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வரவுள்ளார்.

No comments:

Post a Comment