Sunday, May 19, 2013

உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட முடியாது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Sunday, May 19, 2013
இலங்கை::உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், காணி சுவீகரிப்பு மற்றும் படையினர் நிலைநிறுத்தம் தெரடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
பலாலி, காங்கேசன்துறை பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் இந்தியா கேள்வி எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் நாட்டின் பாதுகாப்பு விவகரஙக்ளை அரசாங்கமே நிர்ணயிக்கும் எனவும், அதனை வேறும் தரப்பினர் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய இலங்கை மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.2007-2008ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 43000 படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது 13200 படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment