Sunday, May 19, 2013
இலங்கை::சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மிகவும் கருணையானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பானங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தானங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்கி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment