Thursday, May 2, 2013

அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இன்று அதிகாலை இலங்கையில்!

Thursday, May 02, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இன்று அதிகாலை இலங்கைக்கான வியத்தை மேற்கொண்டுள்ளார்.
 
அவருடன் மேலும் இரண்டு சிறப்பு பிரதிநிதிகளும் உடன்வந்துள்ளனர்.
 
இலங்கையுடனான ராஜதந்திர உறவை விஷ்த்தரிக்கும், பிரதமர் ஜுலியா கிலார்ட்டின் கொள்கையின் ஒரு கட்டமாக அவரது விஜயம் அமைவதாக, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
 
அவர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குடிவரவு முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் 42 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் பெரும்பாலும் இன்றைய தினம் கொழும்பை வந்தடைவர் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment