Thursday, May 2, 2013

ஆசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்!

Thursday, May 02, 2013
இலங்கை::கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் சகோதரர் ரியாஸ் சாலி தெரிவித்தார்.
 
இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டதாக ரியாஸ் சாலி மேலும் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை 6 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினரும் விஷேட அதிரடி பிரிவினரும் சுற்றிவளைத்ததாகவும் பின்னர் 7 30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
 
அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment