Thursday, May 02, 2013
சென்னை::தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 8 சதவீதம் உயர்த்தி, தற்போதுள்ள 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 8 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.

No comments:
Post a Comment