Wednesday, May 8, 2013

இலங்கையில் பிரிவினைவாதத்தை உருவாக்க தென்னிந்திய திரைப்பட துறையினர் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தியமையால், அவர்களின் திரைப்படங்களுக்கு இலங்கையில் தடை விதிக்க வேண்டும்: ராவணபலய!

Wednesday, May 08, 2013
இலங்கை::இலங்கையில் பிரிவினைவாதத்தை உருவாக்க தென்னிந்திய திரைப்பட துறையினர் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தியமையால், அவர்களின் திரைப்படங்களுக்கு இலங்கையில் தடை விதிக்க வேண்டும்: ராவணபலய! 
 
இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தென்னிந்திய திரைப்பட துறையினர்  படங்களுக்கு தடை குறித்து பேச்சுவார்த்தை!
 
தென்னிந்திய திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால், அவற்றை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
ராவணபலய என்ற பௌத்த அமைப்பின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அலோக சேரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் பிரிவினைவாதத்தை உருவாக்க தென்னிந்திய திரைப்பட துறையினர் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தியமையால், அவர்களின் திரைப்படங்களுக்கு இலங்கையில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடி வரும்   தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய்,சரத்குமார், ஆகியோரின் படங்களுக்கு தடைவிதிக்க கோரி இலங்கை கொழும்புவில் உள்ள ராவணனின் சக்தி என்ற அமைப்பை சேர்ந்த புத்த துறவிகள் இலங்கை பிலிம் கார்ப்பரேஷன் சேர்மன் அசோக் ஸ்ரீசிங்கேயிடம் மனு அளித்தனர்
 
இந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment