Wednesday, May 08, 2013
காரைக்கால்::இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுவிக்க கோரி பைபர் படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

இலங்கை கடற்படை கடந்த மாதம் 5ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது. அவர்களை விடுவிக்கக் கோரி காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 26 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கக்கோரி பைபர் படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400 பைபர் படகுகள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை தீவிரமாக்கும் விதமாக நாளை ரயில் மறியல் நடத்தப்பட உள்ளது. இதைதொடர்ந்து கடையடைப்பு போராட்டமும், அடுத்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment