Wednesday, May 8, 2013

அஸாத் சாலி தமிழ்நாட்டில் தெரிவித்துள்ள கருத்துக்கள் முழு இலங்கை மக்களுக்கும் எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது!

Wednesday, May 08, 2013
இலங்கை::கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலி தமிழ்நாட்டில் தெரிவித்துள்ள கருத்துக்கள் முழு இலங்கை மக்களுக்கும் எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் பிரசுரமாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்காக சந்தேக நபர் ஊடக சந்திப்பை வழங்கி 24.04.2013 அன்று வெளியான இதழில் 24 ஆம் 25 ஆம் பக்கங்களில் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயுதம் எடுப்பதைவிட வேறு வழி இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறே இணையத்தளம் www.vikatan.com  என்ற இணையத்தளம் ஊடாக உத்தேச சஞ்சிகையை உலகளாவிய ரீதியில் பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ள பிரச்சினைக்குரிய அறிக்கையை வாசித்து அதன் அபாய நிலை தொடர்பாக மக்களிடையேயும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
அதனுடன் தொடர்பான முறைப்பாடு குறிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் தொடர்பான விசாரணையின் போது வெளியான காரணங்களின் பேரிலும் முறைப்பாட்டின் பேரிலும் சந்தேக நபரினால் இலங்கை குற்றவியல் தண்டனை சட்டத்தின் 120 ஆவது பிரிவு மூலம் விவரிக்கப்பட்டுள்ள தவறான இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உணர்வை தூண்டுதல் அல்லது தூண்டுதலுக்கு முயற்சித்தல், மக்கள் மத்தியில் மகிழ்வற்ற தன்மை அல்லது எதிர்ப்பை ஏற்படுத்தவோ அல்லது வகுப்பாலருக்கு இடையில் எதிரியாக ஐக்கியம் சீர்குலைவு போன்ற உணர்வுகளை அதிகரிப்பதற்கு முயற்சிக்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றத்துக்கும் அந்தத் தவறைக் கூறி 2.05.2013 காலை 7 மணிக்கு கொலன்னாவை, காமினி வீதி, சாலமுல்ல 25 ஆம் இலக்க முகவரியில் மறைந்திருந்த போது கைதானார்.
 
கைதாக முன்னர் பல முறை வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முஹம்மட் அஸாத் சனூன் சாலிக்கு குற்ற விசாரணை திணைக்கள விசாரணை அலுவலகத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டும் அவர் அவ்வாறு வராமல் மேற்குறிப்பிட்ட முகவரியில் மறைந்திருந்த போது கைதானார்.
அவரைக் கைது செய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் சீர்குலைத்து முஸ்லிம் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்ய இந்த கருத்துக்கள் அடிப்படையாக அமையலாமென தேசிய பாதுகாப்பு ஊடக நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே கூறியுள்ளார்.
 
எல். ரி. ரி. ஈ. அமைப்பின் ஆரம்ப காலத்திலும் பிரபாகரன் எமது நாட்டைப் பற்றி வெளிநாடுகளில் இவ்வாறான கருத்துக்களை கூறிய போதும் அன்றைய அரசு அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உலகில் பிரபல்யமான, பயங்கரவாத குழுவாக அது வளர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறான அமைதியான கொள்கையை கொண்டு சென்று அவர்களுக்கு வளர்வதற்கு இடமளிப்பது சிக்கல் வாய்ந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் (6/5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஹுலுகல்லே ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.
 
முஸ்லிம் இனத்தவர் என்ற வகையில் அஸாத் சாலி கைது செய்யப்படவில்லை:-
 
அரசுடன் நல்ல மனதோடு முஸ்லிம் மக்களும் தலைவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர். கிழக்கில் அதிகமானோர் முஸ்லிம்கள்.
அதிக அபிவிருத்தியும் உட்கட்டமைப்பு வசதிகளும் அந்த பகுதிக்கு வழங்கப்பட்டு உச்ச மட்டத்தில் அரசு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்நாட்டின் முஸ்லிம்கள் அதிகமானோர் அரசுடன் உள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் பிரச்சினைகளில் முஸ்லிம் நாடுகள் தான் எமக்கு அருகில் இருந்து உதவின. நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு அரசு சிறுபான்மை என்று கருதாமல் பொதுவாகவே சேவைகளை வழங்குகிறது.இவ்வாறு சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் செயலாற்றும் மக்களை பிரிக்கும் நோக்குடன் அஸாத் சாலி தமிழ்நாடு சென்னைக்குச் சென்று நாட்டுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.
 
இதுபோன்று சில நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பாகவும் அவருக்கு எதிராக இரகசிய பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்கள் உட்பட அவருக்கு எதிராக பல குற்றச் சாட்டுக்கள் கோவை செய்யப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் சாதாரண பிரஜை என்ற வகையில் அவரைப் பற்றி விசாரணை ஆரம்பமாகியுள்ளது. பிரதான குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
 
அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் முஸ்லிம் மக்களுக்கு இழிவாகும்.
உலகில் பரவுகின்ற கலகக்கார, பயங்கரவாதம் காரணமாக நாட்டின் நன்மை கருதி அவரைப் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு முன்னரும் மெளனமாக இருந்ததால் பிரபாகரன் எல். ரி. ரி. ஈயை விஸ்தரித்தமை போன்ற அண்மைக்கால செயற்பாடுகளை நாம் அறிவோம். மீண்டும் அத்தகைய தவறு நிகழ இடமளிக்கக் கூடாது. இலங்கை மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சுற்றாடலை உருவாக்க நாம் சட்டத்தை சரியாக  வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment