Thursday, May 9, 2013

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Thursday, May 09, 2013
இலங்கை::போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அமைச்சரின் அலுவலக இணைப்பாளர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான துண்டுபிரசுரங்களை விநியோகித்து வந்த நிலையில், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர் மீது தாக்குதல் ந

இத்தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூற வேண்டுமென்று தெரிவித்தார்.

இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவத,

"போரால் பாதிக்கப்பட்ட அமைப்பினால் தனக்கு எதிராக விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப்பிரசுரம், தனக்கும் தனது கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், பொதுமக்களுக்கு என்மீது வன்முறை ஏற்படுத்தும் வகையில், அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்".

இதேவேளை, இந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் அமைப்பு பதிவு செய்தமைக்கான பதிவு இலக்கம் குறிப்பிடப்படவில்லை என்றும் இந்த அமைப்பு சட்ட ரீதியாக நடத்தப்படுகின்றதா என்பதனை ஆராயுமாறும் இந்த அமைப்பு எனக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்த நிலையில், இந்த அமைப்புக்கு எதிராக வன்முறைகள் இடமபெற்றால், அதற்கு நான் பொறுப்பென்று கூறுமிடத்து அதற்கான எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த முறைப்பாட்டில் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது
டைபெற்றது.

No comments:

Post a Comment