Wednesday, May 01, 2013
இலங்கை::இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு மாற்றமான முறையில் இனக்குரோதத்தை விதைத்து முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாட்டிலில் சில இஸ்லாமிய அமைப்புக்கள் களமிறங்கியிருப்பது நாட்டில் சிறுபான்மையினராக வா
ழும் முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல’ என கல்முனை மாநகர சபையின் ஐ.ம.சு.மு உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு;இலங்கை::இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு மாற்றமான முறையில் இனக்குரோதத்தை விதைத்து முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாட்டிலில் சில இஸ்லாமிய அமைப்புக்கள் களமிறங்கியிருப்பது நாட்டில் சிறுபான்மையினராக வா
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சௌஜன்யத்தையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு கட்டத்திலும் இனமுரண்பாட்டுக்கு தூபமிடுமாறு இஸ்லாம் எந்த வேளையிலும் போதித்ததும் கிடையாது.
ஆனால் இவற்றை நன்கு தெரிந்திருந்தும்அறிந்திருந்தும் இஸ்லாத்தை வளர்ப்போர் என தம்மைக்கூறிக் கொள்ளும் தௌஹீத் அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வாறான செயற்பாட்டில் களமிறங்கியிருப்பது முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் தௌஹீத் அமைப்பில் இணைந்து செயற்படும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தோரை பாராட்டியே ஆக வேண்டும். அவர்களது நிதானப்போக்கு வரவேற்புக்குரியது.
பொதுபல சேனா என்ற அமைப்பினரால் முஸ்லிம்களுக்கு அநீதிகள் ஏற்படுத்தப்பட்டமை என்பது உண்மை. இந்த இனவாத அமைப்பின் செயற்பாடு தற்போது மங்கிக் கொண்டு அழிந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் மேலும் மேலும் ஆக்ரோஷமானதும் எழுச்சியூட்டும் கருத்துக்களை முன்வைத்து மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது குறித்து இன்று முஸ்லிம் சமூகம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
அது மட்டுமன்றி பொதுபல சேனாவின் செயற்பாட்டுக்கு அரசு துணை போகின்றது அல்லது பாதுகாப்புச் செயலாளர் துணை போகின்றார் என்பதெல்லாம் வெறும் எழுந்தமான ஊகங்களே ஒழிய அதில் துளியளவும் உண்மையில்லை என்பதை சு.க.பிரமுகரான என்னால் பொறுப்புடன் கூற முடியும்.தங்கள் அமைப்பினரால் அச்சிடப்படும் வெளியீடுகள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக வெறும் கட்டுக் கதைகளை புணைவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் பகிரங்கமாக அறிவித்தும் கூட அவர்கள் மீது இவ்வாறான பிரிவினர் மீண்டும் மீண்டும் கைநீட்டுவது ஆட்சியைக் கவிழ்க்க கங்கனம் கட்டிக் கொண்டு நிற்கும் குழுக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டோ என்ற ஐயத்தையே தோற்று விக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் எதிரி ஐ.ம.சு.மு அரசு எனக் காட்டி பகைமையை உண்டு பண்ண எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் முட்டுக் கொடுக்க முஸ்லிம் சமூகம் தயாராகயில்லை.
குர்ஆன் ஹதீஸை கற்றறிந்த ஓர் உலமா தவறிழைக்கும் போது அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் முஸ்லிம்கள் எந்தளவு தூரம் பொறுமையையும் நாகரீகத்தையும் கடைப் பிடிக்கின்றோ அதே நிலைதான் சிங்கள மக்களின் மதிப்பிற்குரியவர்களான பௌத்த தேரர்கள் தவறிழைக்கும் போது அவர்கள் மீது அநாகரிகமான முறையில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை அரசுக்கு இருந்துள்ளது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களை அழித்து எமது சொத்துக்களை கபளீகரம் செய்த புலிகளை ஒழித்து இன்று முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் வர்த்தகர்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்த பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவாரா? என்ற யதார்த்தமான கேள்வியையும் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் குழுக்களை நோக்கி கேட்க விரும்புகின்றேன்.
எனவே ஓரிரு இனவாதம் கொண்டோரின் செயற்பாட்டுக்காக முழு சிங்கள மக்களையும் அவமதிக்கும் செயற்பாட்டில் நாம் கால்பதிக்க முடியாது என்பதை உணர்ந்து அழிந்து செல்லும் பொதுபல சேனாவை தூக்கியெறிந்து விட்டு நன்கு சிந்தித்து செயற்படுமாறு முஸ்லிம் சமூகத்தை கேட்டுக் கொள்கின்றேன்

No comments:
Post a Comment