Monday, May 20, 2013
இலங்கை::மன்னாரில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் (புலி)முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பிணையில் விடுதலை!
மன்னாரில் நேற்றைய முன் தினம் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் (புலி)முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பிணையில்விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
மன்னார் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட 9 பேர் நேற்றைய முன் தினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறிப்பிட்டனர்.
இந்த கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையொன்று தொடர்பில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment