Monday, May 20, 2013

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கோரிக்கை!

Monday, May 20, 2013
இலங்கை::தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கோரிக்கை!
 
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சீன அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கையை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment