Monday, May 20, 2013
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 22ஆம் திகதி சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் ஆறாவது சீன விஜயம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீன ஜனாதிபதியாக கடந்த ஏப்ரல் மாதம் ஜி ஜின்பிங் பதவியேற்றவுடன் தொலை பேசியில் உரையாடிய முக்கிய அரச தலைவர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை சீன வூ சியாங் காஹேஜ தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நெருக்கமான ராஜதந்திர உறவு வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment