Monday, May 20, 2013

பிரிந்தானியா கிளாஸ்கோவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக மகா யுத்தத்தின் நூறாம் ஆண்டு நினைவு தினம்: இலங்கைக்கு அழைப்பில்லை!

Monday, May 20, 2013
இலங்கை::பெரிய பிரிந்தானியா கிளாஸ்கோவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக மகா யுத்தத்தின் நூறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
 
இந்த நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளை பங்கு கொள்ள அனுமதிக்கக்  கூடாது என ஸ்கொட்லாந்து சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இடம்பெறுவதாக தெரிவித்தே அந்த அமைப்புகள் இந்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எப்படியிருப்பினும் இந்த விடயம் குறித்து இலக்கம் 10 பிரித்தானிய பிரதமரின் செயலகம் இதுவரை அந்த கருத்தினையும் வெளியிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேபோல் முன்னர் இலங்கையில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ள கூடாது என பல அமைப்புகள் கோரியிருந்தன.
 
எப்படியிருப்பினும் பிரதமர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அரச நிர்வாகம் தீர்மானித்தததை அடுத்து, பிரதமர் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்ள தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment