Monday, May 20, 2013

பல்கலைக்கழக மாணவிக்கு அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபருக்கு விளக்கமறியல்!

Monday, May 20, 2013
இலங்கை::கொழும்பிலிருந்து நேற்று அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு  செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 
சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment