Friday, May 03, 2013
கனடா::இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனீ வாகீஸ்வரா தெரிவித்துள்ளார். கனடா ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் நடவடிக்கைகளானது தீய சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உறுப்பு நாடுகளின் இறைமைக்கு மதிப்பளித்தல், கூட்டுறவு, ஒத்துழைப்பு போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதே மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். கனேடிய வாழ் புலம்பெயர் தரப்புக்கள் உள்ளிட்ட சிலர் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment