Friday, May 03, 2013
ஜம்மு::ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சனாவுல்லா ஹக் என்பவனும் ஒருவன். இன்று காலை கோட் பல்வால் சிறை கைதிகளுடன் ஏற்பட்ட மோதலில் சனாவுல்லா ஹக், சக கைதிகளால் தாக்கப்பட்டான். இதனையடுத்து, அவனை சிறை அதிகாரிகள் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
முன்னாள் இந்திய ராணுவ வீரரால் தாக்கப்பட்ட சனாவுல்லாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவன் 'கோமா' நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு, 'கோமா' நிலையில் ஒரு வார காலம் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் நேற்று மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் இன்று அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment