Friday, May 3, 2013

தேசிய அடையாள அட்டையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல் உள்ளடக்கப்பட வேண்டிய வாய்ப்பு!

Friday, May 03, 2013
இலங்கை::தேசிய அடையாள அட்டையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல் உள்ளடக்கப்பட வேண்டிய வாய்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
 
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி ம
ன்றாடியார் நாயகம் விராஜ் தயாரட்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
தேசிய அடையாள அட்டை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment