Wednesday, May 08, 2013
இலங்கை::இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய மா நாட்டில் கலந்து கொள்ள, பபுவா நிவ் கினியா பிரதமர் பீட்டர் ஓ நெயில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய மா நாட்டில் கலந்து கொள்ள தாம் பாரிய எதிர்பார்ப்புடன் இருப்பதுடன் இவ் விஜயத்தின் போது புதிய துறைமுகம், விமான நிலையம், நீர் நிலையங்களையும் சென்று பார்வையிட ஆர்வமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுககான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அட்மிரல் திசார சமரசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே விசேட ஊடகவியலாறர் சந்திப்பில் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கையின் உயர்ஸ்தானிகரை பிரதமர் வரவேற்றதுன், 2011ஆம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையே இருந்த
நற்பையும் சுமூக உறவையும் நினைவு கூர்ந்தார்.
இச் சந்திப்பின் போது, யுத்தத்தின் பின்னரான நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளை உயர்ஸ்தானிகர் விளக்கியதோடு மா நாட்டுக்கு எதிராக சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்டார். இச் சந்திப்பின் போது உயர்ஸ்தானிகர், தேயிலை மற்றும் இரத்தினக் கல் என்பவற்றை பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

No comments:
Post a Comment