Wednesday, May 8, 2013

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு!

Wednesday, May 08, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில், 31 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசு, கோர்ட்டிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. மீனவர்கள், 30 பேரும், இன்று விடுதலை செய்யப்படலாம் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து, ஏப்., 6ல், மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், 30 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். மன்னார் கோர்ட்டில், ஏப்., 18, 26 மற்றும் மே 6ல், மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மீனவர்கள் 30 பேரையும், ஐந்து படகுகளையும் விடுவிக்க, இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல், மன்னார் கோர்ட்டிற்கு, நேற்று கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அதை கோர்ட் பரிசீலித்து, மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படலாம் என, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment