Tuesday, May 7, 2013

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில், இலங்கை மேலும் பல காரியங்களை செய்யவேண்டும்:அமரிக்கா

Tuesday, May 07, 2013
இலங்கை::நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில், இலங்கை மேலும் பல காரியங்களை செய்
யவேண்டும் என்று அமரிக்கா தெரிவித்துள்ளது
 
அமரிக்கத்தூதர் மிச்செய்ல் சிசன் டுவிட்டர் மூலம் நேற்று திங்கட்கிழமை வழங்கியுள்ள செவ்வியில் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்
 
இலங்கையில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியமர்த்தல் நடவடிக்கை மற்றும் கண்ணிவெடியகற்றல் போன்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை சாதகமாக உள்ளது
 
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளில் சிலவற்றின் மீது மாத்திரமே இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.
 
இந்தநிலையில் அரசாங்கம் குடியியல் சமூகத்தின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சிசன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment