Friday, May 17, 2013

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்காலில் கடையடைப்பு!

Friday, May 17, 2013
காரைக்கால்::காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 5 படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சிங்கள ராணுவத்தினர் அந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 26 மீனவர்களையும் கைது செய்து 5 படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். பிறகு 26 மீனவர்களும் அங்கு உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த காரைக்காலை சேர்ந்த பிற மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம், ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 26 பேரும் விடுதலை செய்யப்படவில்லை.
 
அதையடுத்து 26 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி மத்திய- மாநில அரசை கண்டித்தும் காரைக்காலில் கடையப்புக்கு மீனவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று காரைக்காலில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள், மருந்து கடைகள், டீ கடைகள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
 
அதே போல் நேரு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் மூடப்பட்டிருந்தன. மீன் மார்க்கெட்டும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடையடைப்பை தொடர்ந்து காரைக்காலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆண்டோஅல்போன்ஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காரைக்காலில் முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment