Friday, May 17, 2013
சிட்னி::அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
சிட்னி::அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
சிட்னியிலுள்ள பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 21 வயதான இளைஞனின் வீசா இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்கலைக்கழக விடுதியில் வைத்து இவர் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட குறித்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக வீசாவை இரத்துச் செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
அவுஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது!
அவுஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவில் தரையிறங்கும் எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரையும் நௌரு அல்லது பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த நடைமுறைக்கு அமைய அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்பிற்கு வெகு தொலைவில் உள்ள தீவுகளை சென்றடையும் புகலிடக் கோரிக்கையாளர்களை மாத்திரமே குறித்த தீவுகளுக்கு அனுப்புவதற்கான இயலுமை அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இருந்தாக செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைத்த சட்ட பாதுகாப்பு புதிய விதிமுறைக்கு அமைய இரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்துவதாக அவுஸ்ரேலியா தெரிவித்தாலும் அது புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மீறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகியிருந்த 41 பேர் சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள விடுதியொன்றில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் எந்த இடத்துக்கு அகதிகள் வந்தாலும் அவர்கள் குறித்த தீவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருவோரை குறைக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் ஆளும் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
செனட் சபையில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அவுஸ்திரேலிய கீழ் சபையின் இறுதி அனுமதியை இந்த சட்டமூலம் பெறவேண்டும்.
இதேவேளை, அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் தகவல்படி இந்த வருடத்தில் 96 படகுகளில் 6036 பேர் அவுஸ்ரேலியாவுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment