Friday, May 31, 2013

யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது!

Friday, May 31, 2013
இலங்கை::யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
 
மனித உரிமைகள் பேரவையின், நீதிமுறையற்ற கொலைகள் மற்றும் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளானோர் தொடர்பான விசேட செயற்பாட்டாளர்களை சந்தித்த இலங்கையின் பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
 
இந்த குழுவினரால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதத்தடன், இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ளன.
 
கடந்த 30 வருடங்களில் இடம்பெயர்ந்திருந்த, 2லட்சத்து 27 ஆயிரத்து 44 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 67 ஆயிரத்து 231 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்த குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 2 லட்சத்து 95 ஆயிரத்து 873 பேரும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment