Sunday, May 19, 2013
கடலூர்:: (தமிழ் நாடு தீவிரவாதி) சீமானின் கடலூர் கூட்டத்தில், காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பேசியுள்ளார்.
கடலூரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் யாசின் மாலிக் பேசிய போது, இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான்.
தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ, காவல்துறையை கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது. தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment