Sunday, May 12, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடையாக அமைந்துள்ளது என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், 13ம் திருத்தச் சட்டத்தின் சில பகுதிகளை ரத்து செய்வதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், அது கூட்டணி கட்சிகளின் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தெரிவு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உரிய பொருத்தமானவர்கள் தேர்தலில் களமிறக்கப்டுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment