Sunday, May 12, 2013

கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு!

Sunday, May 12, 2013
புதுடில்லி::இலங்கைக்கு வழங்கப்பட்ட, கச்சத்தீவை திரும்பப் பெற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தி.மு.க., தலைவர், கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், கருணாநிதி தாக்கல் செய்துள்ள, "ரிட்' மனுவில் தெ

"செழிப்பான பகுதி':
 
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய, இந்திய பிரதமரின் செயல், அரசியல் சட்டத்திற்கு எதிரானது; இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. அந்த தீவு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.கச்சத்தீவில் மனிதர்கள் வாழவில்லை என்றாலும், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியில், செழிப்பான கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கு இந்த பகுதி, அவசியமான மீன் பிடி பகுதி.

தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்கவும், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், கச்சத்தீவு, மீண்டும் இந்தியா வசம் கிடைக்க வேண்டும்.இதற்காக, இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் தொடர்புகள் செல்லத்தக்கதல்ல என, உத்தரவிட வேண்டும்.

அது போல், இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினரால், திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழந்த தமிழக மீனவர்கள், அவர்கள் இழந்த வாழ்வாதாரம் போன்றவற்றிற்கான, இழப்பீடுகளை வழங்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

"சட்டப்படி செல்லாது':
 
இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட, கச்சத்தீவை தாரை வார்க்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப் பட்டதல்ல. எனவே, அதை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 368ஐ திருத்தம் செய்யத் தேவையில்லை.எனவே, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி செல்லத்தக்கதல்ல என, அறிவிக்கவும் வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி, 1974ல், தமிழக முதல்வராக பதவி வகித்த போது தான், இலங்கைக்கு கச்சத் தீவை, மத்திய அரசு தாரை வார்த்தது குறிப்பிடத்தக்கது.
தெரிவித்துள்ளதாவது:
 
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, தமிழக மீனவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ராமேஸ்வரத்திலிருந்து, 10 மைல் தொலைவில் உள்ள இந்த தீவை, தமிழக மீனவர்கள், ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தனர்.

No comments:

Post a Comment