Wednesday, April 3, 2013

முதல் வெற்றியை ருசிப்பது யார்? கொல்கத்தா & டெல்லி மோதல்!

Wednesday, April 03, 2013
சென்னை::ஐபிஎல் 6வது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு ஈடன் கார்டனில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா & டெல்லி அணிகள் மோதுகின்றன. சோனி மேக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இரு அணியிலுமே நட்சத்திர வீரர்கள் பலர் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். நடப்பு சாம்பியன் பட்டத்துடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. கேப்டன் காம்பீர் முழு உடல்தகுதியை பெறவில்லை என்றாலும் இன்றைய ஆட்டத்தில் ஆடுகிறார். அதிரடி வீரர் மெக்குலம் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இது கொல்கத்தா அணிக்கு சற்று பின்னடைவாகும்.
காம்பீருடன் பிஸ்லா துவக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. மிடில் ஆர்டரில் காலிஸ், மனோஜ்திவாரி, யூசுப்பதான் வலுசேர்த்தால் நெருக்கடி கொடுக்கலாம். சுனில்நரேன் சவாலாக விளங்குவார். கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக செனநாயகே இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரும் களமிறங்கினால் வெளிநாட்டு வீரர்கள் பிரெட்லீ, மோர்க்கன், ஹடின் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு மட்டும் சான்ஸ் கிட்டும்.
டெல்லி அணி ஜெயவர்தனே தலைமையில் களமிறங்குகிறது. முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதால் சேவக் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெசி ரைடர், பீட்டர்சன் ஆகியோர் காயத்தால் விலகியுள்ள நிலையில் சேவக்கும் ஆடாதது அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் மோர்க்கல் இன்னும் அணியுடன் சேரவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சு இர்பான் பதான், உமேஷ்யாதவ் ஆகியோரை நம்பிதான் உள்ளது.

சேவக் இல்லாத நிலையில் இளம்வீரர் உன்முகுந்த்சந்த் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்ககூடும். ஜீவன் மென்டிஸ், ஓஜா, ராஸ் டெய்லர், வேணுகோபால்ராவ் ஆகியோர் நம்பிக்கையுடன் ஆடி ரன் குவித்தால் வெற்றிக்கு வழிவகுக்கலாம். முதல் வெற்றி பெற இரு அணிகளுமே வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும்.

வீரர்கள் விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

காம்பீர் (கேப்டன்), லஷ்மிபதி பாலாஜி, மன்விந்தர் பிஸ்லா, பிராட் ஹாடின், ஜாக் காலிஸ், பிரெண்டன்  மெக்கல்லம், இயான் மார்கன், யூசுப் பதான், பிரதீப் சங்வான், ஷமி அகமது, லஷ்மி ரத்தன் சுக்லா, மனோஜ் திவாரி, சரப்ஜித் லட்டா, ரஜத் பாட்டியா, தேவபிரதா தாஸ், இக்பால் அப்துல்லா, பிரெட் லீ, ரியான் மெக்லாரன், சுனில் நரைன், ஜேம்ஸ் பேட்டின்சன், செனநாயகே, ஷாகிப் அல் ஹசன், ரியான் டென் டஸ்சேட்.

டெல்லி டேர்டெவில்ஸ்:

மகிளா ஜெயவர்தனே (கேப்டன்), வீரேந்திர சேவக், வருண் ஆரோன், குலாம் போதி, உன்முக்த் சந்த், எம்.கவுதம், சித்தார்த் கவுல், மார்னி மார்கெல், யோகேஷ் நாகர், பவான் நேகி, நமன் ஓஜா (கீப்பர்), ஆண்ட்ரூ ரஸ்ஸல், வாண்டெர் மெர்வ், டேவிட் வார்னர், மன்பிரீத் ஜுனேஜா, அஜித் அகர்கர், ஜோகன் போத்தா, ராய்ஸ்டன் டயஸ், கேதார் ஜாதவ், ஜீவன் மெண்டிஸ், ஷாபாஸ் நதீம், சுஜித் நாயக், ஆசிஷ் நெஹ்ரா, இர்பான் பதான், ஜெசி ரைடர் (காயம்), அரிஸ்த் சிங்வி, வேணுகோபால் ராவ், உமேஷ் யாதவ்.

பலம்&பலவீனம்:

கொல்கத்தா பலம்: சுனில் நரேனின் மாயசுழல். காலிஸ், பிஸ்லா பொறுப்பான ஆட்டம்.

பலவீனம்: காம்பீர் முழு உடல்தகுதியுடன் இல்லை. மெக்குலம் காயம்.

டெல்லி பலம்: உன்முகத்சந்த், ஜீவன் மென்டிஸ் அதிரடி.
பலவீனம்: சேவக் காயம். மோர்னே மோர்க்கல் ஆடாதது. பீட்டர்சன், ஜெசிரைடர் விலகல்.

நேருக்கு நேர்:

இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.

No comments:

Post a Comment