Wednesday, April 03, 2013
இலங்கை::தாம் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை::தாம் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எனது தலைமைத்துவம் காரணமாக சிலவேளை என்னைக் கொலை செய்வார்களா என்பது கூடத் தெரியாது. நான் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளேன். எம்மைக் கொலை செய்தாலும் இந்தக் கட்சியின் பயணம் தொடர வேண்டும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் எம் கட்சியில் உள்ள தைரியமானவர்கள் கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்,' என்றார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.
No comments:
Post a Comment