Wednesday, April 3, 2013

போதிய சாட்சியங்கள் இல்லாததால் மாலக்க சில்வா உள்ளிட்ட எழுவர் விடுதலை!

Wednesday, April 03, 2013
இலங்கை::இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கோட்டை நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாலக்க சில்வா உட்பட பிரதிவாதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய பிரதிவாதிகளை விடுதலை செய்வதற்குத் தீர்மானித்ததாக நீதவான் குறிப்பிட்டார்.

வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இல்லையென சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதால் பிரதிவாதிகளை விடுதலை செய்ய தீர்மானித்ததாக நீதவான் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment