Friday, April 5, 2013

கிளிநொச்சியிலுள்ள உதயன் அலுவலகம் மீதான தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எதுவித தொடர்பும் கிடையாது! பிரியதர்ஷன யாப்பா!


Friday, April 05, 2013
இலங்கை::கிளிநொச்சியிலுள்ள உதயன் அலுவலகம் மீதான தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எதுவித தொடர்பும் கிடையாது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறதென அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதே வேளை, மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு அரசாங்கம் உடந்தையாக செயற்பட்டதாக கூறப்படும் செய்திகளை நாம் நிராகரிக்கின்றோம். மற்றும் கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் நிராகரிக்கிறோம்.

வடக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 30 வருட யுத்தத்தின் பின் இங்கு தேர்தல் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இதில் யார் வெல்வது என்பது முக்கியமில்லை.

வடக்கு தேர்தல் தவிர 2014ல் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது. 2016ல் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.

மக்கள் தந்த அதிகாரம் இது. முன்கூட்டி தேர்தல் நடத்தும் அவசியம் கிடையாது என்றார்.
        

No comments:

Post a Comment