Friday, April 05, 2013
இலங்கை::நேற்று முன்தினம் திருகோணமலையில் கரும்புலிகள் பயன்படுத்திய தாக்குதல் படகை பார்த்து ஆச்சரியமுற்ற சீன பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் செகுயு கியுக் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டார்.
அத்துடன் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்து ஆச்சரியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடற்புலிகள் கரும்புலித் தாக்குதல் படகை அமைப்பதற்கு எத்தகைய தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளனர் எனவும் எவ்வாறான தாக்குதல் உத்திகளை மேற்கொண்டிருந்தமை குறித்தும் சீனப் பாதுகாப்பு அமைச்சர், இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதியிடம் கேட்டறிந்து
கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழு திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் கிழக்குத் தலைமையகமான டொக்யார்ட்டுக்கு சென்றதுடன் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment