Friday, April 05, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தபோது பேருவளை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 38 பேரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தபோது பேருவளை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 38 பேரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
பேருவளை கடற்பரப்பில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த 38 பேரும் நேற்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 35 தமிழர்களும் இரண்டு சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹாபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், கல்முனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹாபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், கல்முனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment