Thursday, April 04, 2013
இலங்கை::இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்களையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களையும் ஏற்றி, இறக் காதிருக்க எதுவித முடிவும் எடுக் கப்படவில்லையென துறை முகங்கள் நெடுஞ்சாலைகள் கருத்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
வழமை போல இந்திய பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். தமிழ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய் யப்படும் பொருட்களையும் தமிழ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களையும் ஏற்றி இறக்குவதை நிறுத்தப் போவதாக துறைமுக ஊழியர் சங்கமொன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுக பிரதான வாயிலுக் கருகில் எதிர்ப்பு ஆர் ப்பாட்டமொன்றும் நடைபெற்றது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:
கடந்த தினங்களில் சென்னை நகரில் வைத்து சில நபர்களினால் பிக்குமார் தாக்கப்பட்டனர். ஆனால் இலங்கையில் எந்த இனத்தவருக்கோ மதத்தவர்களு க்கோ எதுவித அநீதியும் இழைக்கப் படமாட்டாது.
கொழும்பு துறைமுகத்தி னூடாக இந்திய பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதாக துறைமுக ஊழியர் சங்கமொன்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய பொருட்களை ஏற்றி இறக்காதிருக்க துறைமுக அதிகார சபை எந்த வித முடிவும் எடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் அறிவிக்கிறேன்.
வழமை போல இந்திய பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதில் எதுவித மாற்றமும் கிடையாது. எமது அயல்நாடான இந்தியாவுடன் ராஜதந்திர உறவு சிறப்பாக காணப்படுகின்றது. அரசாங்கம் இந்திய பொருட்களை ஏற்றி இறக்காதிருக்க எதுவித முடிவும் எடுக்கவில்லை. ஏற்றி இறக்கல் நடவடிக்கை தடையின்றி இடம்பெறும் என்றார்.
No comments:
Post a Comment