Thursday, April 4, 2013

உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு இலங்கை வந்துள்ள சீன பிர திப் பாதுகாப்பு அமைச்சர் சூகிங்க் தலைமையிலான குழுவினர் நேற்று வட பகுதிக்கு விஜயம்!


Thursday, April 04, 2013
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு இலங்கை வந்துள்ள சீன பிர திப் பாதுகாப்பு அமைச்சர் சூகிங்க் தலைமையிலான குழுவினர் நேற்று வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் முதலாவதாக யாழ்ப்பாணத்திற்கும் அதன் பின்னர் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரூவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சீன பிரதிப் பாதுகாப்பு அமைச்சரை இராணுவத்தின் 512வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல வரவேற்றுள்ளார்.
அதன் பின்னர் யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த அவர்கள் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுரு சிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ். ஒல்லாந்தர் கோட்டை உட்பட பல்வேறு பிரதேசங்க ளுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டு ள்ளனர். அதனைத் தொடர்ந்து கிளிநொச்சிக்கும் விஜயம் செய்துள்ளனர்.
 
வட பகுதி விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை கொழும்பு திரும்பிய சீனப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர்கள், திருகோணமலை கடற்படை தலைமையகத்திற்கும், டொக்கியார்ட்டுக்கும் சென்றுள்ளனர்.
திருமலை கடற்படை நூதனசாலையை பார்வையிட்ட அவர்கள் கடற்படை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment