Wednesday, April 3, 2013

இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இந்தியா பயணமாகியுள்ளார்: திஸ்ஸ அத்தநாயக்க!

Wednesday, April 03, 2013
இலங்கை::இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இந்தியா பயணமாகியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின் போது இலங்கை தொடர்பில் தமிழகத்தில் உருவாகியுள்ள நிலைமைகள், ஜெனீவா விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் போன்றவை குறித்து இந்திய தலைவர்களுடன் விரிவாக உரையாடுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் மற்றும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் குறித்து இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையின் காரணமாகவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்றும் அவர் கூறினார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இந்திய ஜனாதிபதியின் எத்திபோகபூர்வ அழைப்பையேற்றே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இது அவசர விஜயமல்ல. மார்ச் மாத ஆரம்பப்பகுதியில் இந்தப்பயணம் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும் சில காரணங்களினால்இந்த விஜயம் தாமதமானது. அதன்படி தற்போது இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் என்றார்.
 

 

No comments:

Post a Comment