Wednesday, April 3, 2013

வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதிக்காகவே தென்னிந்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்:-தேர்தல் காலங்களில் மட்டும் உரிமைகள், தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுவதையே விரும்புகின்றனர் : அமைச்சர் வீரவன்ச குற்றச்சாட்டு!

Wednesday, April 03, 2013
இலங்கை::தேர்தல் காலங்களில் மட்டும் உரிமைகள், தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுவதையே விரும்புகின்றனர்.
 
இதற்கு இடம்கொடுக்காது நாம் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக உருவெடுக்க வேண்டும் என தேசிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
 
ஜேனிவா, இந்தியாவில் இருப்பவர்களும் ஜெனிவாவிற்குச் சென்று வருபவர்களும் எமது பிள்ளைகளின் கழுத்துகளில் சயனைட் குப்பிகள் இருப்பதையே விரும்புகிறார்கள்.

இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாதிப்படைகிறது. தென்னிந்தியாவில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தென்னிந்தியாவில் இருந்து கிடைக்கும் பெருமளவான நிதிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் இருந்திருந்தால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.

யுத்தம் நடைபெறும்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி இரண்டு பக்கமும் குளிரூட்டிகளை வைத்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். உலகத்திலேயே குளிரூட்டிகளை வைத்துக்கொண்டு உண்ணாவிரதம்
இருந்தவர் அவர் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment