Tuesday, April 02, 2013
இலங்கை::பெபிலியான பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 3 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
மிரிஹான விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சரணடைந்ததையடுத்தே இந்த கைது இடம் பெற்றுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பெபிலியான வர்த்தக நிலையத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கற்கள் ,தடிகள் மற்றும் கம்பிகள் சகிதம் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பிக்குகள் மூவரே இவ்வாறு சரணடைந்துள்ளனர். கடந்த வியாழனன்று பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த நிறுவனம் மீது பிக்குகள் சகிதம் வருகை தந்த குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது. அத்துடன் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட பலர் காயமடைந்திருந்த நிலையில் உடமை சேதங்களும் பதிவாகியிருந்தன.
No comments:
Post a Comment