Tuesday, April 2, 2013

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்லும் பல்வேறு நாட்டவர்களில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Tuesday, April 02, 2013 அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்லும் பல்வேறு நாட்டவர்களில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அபாயகரமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் வரிசையில் ஈரானியர்கள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையில் இருந்து படகுகளில் செல்ல முற்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 428 என புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் மாற்றம் செய்யப்பட்ட வெளிவிவகாரத்துறை சட்ட மாற்றங்களே இதற்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர, அதிக அளவில் தமது சொந்த மண்னை விட்டு வெளியேறும் அகதிகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ள அதேவேளை, இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான், ஈராக், பங்களாதேஷ், வியாட்நாம், மியன்மார் போன்ற நாடுகளிலிருந்தும் அகதி அந்தஸ்து கோருபவர்களே அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment