Friday, March 22, 2013

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புடைமை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அர்த்தமுள்ளதாக முன்னெடுக்க வேண்டும்:அமெரிக்கா வலியுறுத்தல்!

Friday, March 22, 2013
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புடைமை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அர்த்தமுள்ளதாக முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறத்தியுள்ளது.

அமெரிக்காவின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் ஊடாக, அமெரிக்கா இந்த இந்த செய்தியை அரசாங்கத்துக்கு வழங்குவதாக, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

2012ம் ஆண்டு மனித உரிமைகள் மாநாட்டை நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அனுசரணையிலான பிரேரணையின் அடிப்படையில் நேற்றைய பிரேரணையும் அமைந்திருந்தது.

இதன் மூலம் இலங்கை, தமது மக்களுக்காக நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் அமெரிக்க அரசாங்கம் எந்த நிலையிலும் இலங்கைக்கு உதவி செய்ய காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment