Friday, March 22, 2013

இலங்கை அரசாங்கம் தங்களின் ஆலோசனை அமுலாக்க இணங்குமாக இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – ரணில்!

Friday, March 22, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கம் தங்களின் ஆலோசனை அமுலாக்க இணங்குமாக இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க வேண்டும்.

இதற்கு சில யோசனைகளையும் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ளது.

இதன் மூலம் நாட்டு மக்களுக்க நலன் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று, வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், வேறொரு நாடு தலையீடு செய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் கொள்கை வழியேற்படுத்திக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment