Friday, March 22, 2013

ஜனாதிபதியை போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால் எமது பிணத்தின் மீதே நடக்கும்:பெங்கமுவே நாலக தேரர்!

Friday, March 22, 2013
இலங்கை::இலங்கையில் மனித உரிமைகளை மீறியதாக கூறி,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை அமெரிக்காவின் போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், அது தமது பிணத்தின் மீதே நடக்கும் என சுதந்திர அமைப்புகளின் ஒன்றியம் அமைப்பின் தலைவரும் தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளருமான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பிராந்தியத்தில் சக்திமிக்க நாடாக இருந்த போதிலும் தாம் அஞ்சபோவதில்லை எனவும் நாட்;டின் சுதந்திரத்திற்காக எதனையும் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, நாட்டில் தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தால், அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து நிறைவேற்றி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை என்ற சகோதரியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த இந்தியா, அமெரிக்காவுக்கு உதவுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஒழுக்கமற்ற நாடுகளாகும். அமெரிக்கா, இலங்கையின் புலிகளை போஷித்தாலும், அந்த பயங்கரவாதிகளை நாம் ஒடுக்கி விட்டோம். அந்த அமைப்பை மீண்டும் எழுச்சிப்பெற இடமளிக்க மாட்;டோம் எனவும் நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment