Tuesday, March 26, 2013
இலங்கை::இந்திய நிறுவனத்திடம் எண்ணெய்த் தாங்கிகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2002ம் ஆண்டில் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் போன்றே, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வழங்கியுள்ளது என சுற்றாடல் மற்றும் மீள் சுழற்சி சக்தி வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு எண்ணெய்த் தாங்கிகளை வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, இன்று குறித்த எண்ணெயத் தாங்கிகளை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் பிரதான நகரமொன்றில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த இலங்கையில் ஈட்டும் வருமானத்தை விடவும் அதிகளவில் சம்பாதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய எண்ணெய் நிறுவனம் நட்புறவு அடிப்படையிலேயே இலங்கையில் வர்த்தகம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இந்த எண்ணெய் தாங்கிகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக வெளியான
தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment