Tuesday, March 26, 2013

மாணவர்கள் போராட்டம் தீவிரம்: கல்லூரிகள் திறப்பது மேலும் தாமதம்!

Tuesday, March 26, 2013
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் தீவிரமாகி வருவதால் கல்லூரிகள் திறப்பது மேலும் தாமதமாகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் காலவரையின்றி அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. விடுதிகளை மூடியதால் வெளியூர் மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டதால் மாணவர்கள் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக மே மாதத்தில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போகும் நிலை உள்ளது. தேர்வுக்குரிய பாடப்பகுதிகள் முடிக்கப்படாததால் தேர்வை தள்ளி வைக்க பல்கலைக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு முடிந்த நிலையிலும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அறிவித்து உள்ளதால் கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளையும் ஏப்ரல் 1-ந் தேதி அன்று திறக்கலாம் என்று அரசிடம் உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் கல்லூரிகளை திறப்பதை தாமதப்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலை குறித்து போலீஸ் உளவுப்பிரிவு மூலமாகவும், கல்லூரிகள் வழியாகவும் உயர் கல்வித்துறை தினமும் அறிக்கை பெற்று வருகிறது. போராட்டங்களில் தீவிரமாகும் மாணவர்கள் மேலும் சில நாட்கள் விட்டு பிடிக்கலாம் என தெரிகிறது.

எனவே கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் 1-ந் தேதிக்கு பிறகுதான் திறக்கப்படுகிறது. இது குறித்து பல்கலைக் கழகம் தரப்பில் கூறும்போது,

மாணவர்கள் படிப்பு பாதிக்ககூடாது என்பதில் கருத்துடன் செயல்பட்டாலும் போராட்ட சூழல் பலமாக இருப்பதால் கல்லூரிகளை திறப்பதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
================================================================
Tuesday, March 26,2013 10:47 AM, SESHASAYEE said: 14 4

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் ஒரு தலை முறை உருப்படாமல் போனது. அது போல், ஈழ பிரச்சினை போராட்டத்தினால், ஒரு தலை முறை அதே கதிக்கு ஆளாகப்போகிறது. புத்தியுள்ள மாணவன் பிழைத்துக்கொள்வான். தவறான பாதையில் சென்று வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

Tuesday, March 26,2013 11:35 AM, கண்ணன் said: 2 2

படிப்பையே நம்பியிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விடாதீர்கள்.

Tuesday, March 26,2013 12:02 PM, உண்மை தமிழன் said: 4 1

கல்லூரிகளை எல்லாம் மாட்டு கொட்டாய் ஆக்கி விடுங்கள் ..ஒருத்தனுக்கும் படிப்பின் மேல் அக்கறை கிடையாது ...பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது ...நாளைக்கு இலங்கை தமிழர்கள் வந்து இவர்களுக்கு சோறு போடுவார்கள் ...அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டி விட்டு சம்பாதிக்க போய் விட்டார்கள்.. எத்துனை அகதிகள் உள்ளனர் ......ஒரு இலங்கை தமிழனாவது உங்க போரட்டத்திற்கு குரல் கொடுத்தானா ?...அவனுகளுக்கு கள்ள தோணியில் கனடா ,ஆஸ்திரேலியா நாட்டுக்கு போக வேண்டும் ...அவனுக எப்படியோ போய் முன்னேறி விடுவார்கள் ..நீங்கள் போராட்டம் ,உண்ணாவிரத என்று உருபடாம போங்கள்....

Tuesday, March 26,2013 12:33 PM, சங்கர் said:
தமிழ் நாட்டில் கல்லூரிகள் அனைத்தையும் மூடி விட வேண்டுமா? இலக்கு இல்லாத போராட்டத்தினால் எந்த பலனும் கிடைக்காது. அரசியவாதிகள் தங்களின் அரசியலுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து விடக்கூடாது. மக்கள் ஆதரித்த இந்த போராட்டத்தை அவர்கள் வெறுக்கும் நிலைக்கு கொண்டுபோய் விடக்கூடாது. மாணவர்களை படிக்க விடுங்கள். எத்தனையோ ஏழை பெற்றோர் மிகுந்த கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். அவர்கள் கண்ணீர் சிந்த வைத்து விடாதீர்கள்

No comments:

Post a Comment