Tuesday, March 26, 2013
இலங்கை::தமிழக அரசியல்வாதிகள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் முழு சார்க் பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யாத்திரிகர்களாக ஆன்மீக நலனை தேடி இந்தியாவுக்கு செல்லும் அப்பாவிகள் மீது தமிழகத்தில் உள்ள வன்முறையாளர்கள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்துவது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டால் அதனை புரிந்து கொள்ள முடியும்.
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தாக்குதல்களை தடுக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இப்படியான சம்பவங்கள், ஜனநாயக அரச நிர்வாகத்தின் இடைவெளியை எடுத்து காட்டுகிறது. இதனால் தமிழகத்தில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த அந்த மாநில அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும்
வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
No comments:
Post a Comment