Tuesday, March 26, 2013

மனித உரிமை பேரவையில், முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்க, இந்திய யோசனைக்கு இணங்குவது தற்கொலை செய்வதற்கு ஈடானது: குணதாச அமரசேகர!

Tuesday, March 26, 2013
இலங்கை::மனித உரிமை பேரவையில், முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்க, இந்திய யோசனைக்கு இணங்குவது தற்கொலை செய்வதற்கு ஈடானது என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்த யோசனைக்கு விரும்பி இணக்கம் தெரிவித்தால், போர் நடைபெற்ற போதுக் கூட அடிப்பணியாத இலங்கைக்கு, நிபந்தனைகள் இன்றி, வெளிநாட்டு விசாரணையாளர்கள் வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்காவின் யோசனையை எதிர்ப்பதாகவும் அதற்கான காரணத்தை அச்சமின்றி வெளியிட்டு, பின்னர், ஏற்படும் நிலைமைகளை மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தியாவில் பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் ஜெனிவா சூழ்ச்சியின் ஒரு பகுதியே எனவும் குணதாச அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment