Thursday, March 28, 2013

இலங்கை தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்த வேண்டும்:மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் ராமகிருஷ்ணன்!

Thursday, March 28, 2013
சென்னை::மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:இலங்கை இனப்பிரச்சனைக்கு ஆயுதமோதல் தீர்வாகாது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு&கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க மார்க்சிஸ்ட் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளதோடு, சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும் இந்தியாவின் அண்டை நாடு என்ற முறையிலும் ராஜீய ரீதியாக இந்தியா தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வற்புறுத்தி வந்துள்ளது. இலங்கை ராணுவம் இழைத்திட்ட போர்க் குற்றங்கள் மீது சர்வதேச புலன் விசாரணை கோருவதற்கு மாறாக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட சுயேச்சையான நம்பத் தகுந்த விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இலங்கை அரசை ஏற்க வைத்திட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளித்திடுவது உள்ளிட்ட அதிகபட்ச சுயாட்சி வழங்கிட இந்திய அரசும், ஐ.நா. மன்றமும் இலங்கை அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment